தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/பஸ் பயணத்திட்டம் அமைச்சர் துவக்கம்

பஸ் பயணத்திட்டம் அமைச்சர் துவக்கம்

பஸ் பயணத்திட்டம் அமைச்சர் துவக்கம்


ADDED : மார் 13, 2024 10:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2024 10:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெ.நா.பாளையம் : ஆனைகட்டி மலைப்பகுதிக்கு பஸ்களில் பெண்கள் கட்டணமில்லாமல் பயணிக்கும் திட்டத்தை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார்.

ஆனைகட்டி மலைப்பகுதிக்கு காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து இயக்கப்படும் அரசு பஸ்களில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணிக்கும் திட்டத்தை தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி கொடியசைத்து, நேற்று துவக்கி வைத்தார்.

ஆனைகட்டி பஸ் ஸ்டாண்டில் நடந்த நிகழ்ச்சியில், கூடுதல் கலெக்டர் ஸ்வேதா சுமன், வடக்கு வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஜோசப் டயர்ஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், வீரபாண்டி ஊராட்சி பகுதியைச் சேர்ந்த, 108 பயனாளிகளுக்கு தலா, 5.07 லட்சம் மதிப்பிலான பிரதம மந்திரி குடியிருப்பு திட்ட அனுமதி ஆணைகளை அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us