/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பஸ்--லாரி நேருக்கு நேர் மோதல் உயிர் தப்பிய பயணிகள்
/
பஸ்--லாரி நேருக்கு நேர் மோதல் உயிர் தப்பிய பயணிகள்
பஸ்--லாரி நேருக்கு நேர் மோதல் உயிர் தப்பிய பயணிகள்
பஸ்--லாரி நேருக்கு நேர் மோதல் உயிர் தப்பிய பயணிகள்
UPDATED : டிச 25, 2024 08:58 AM
ADDED : டிச 24, 2024 10:47 PM

பந்தலுார்,; தேவர்சோலை அருகே, பஸ்- -லாரி நேருக்கு நேர் மோதி கொண்டதில் பயணிகள் உயிர் தப்பினர்.
கூடலுாரில் இருந்து தேவர்சோலை வழியாக, தாளூர் பகுதிக்கு நேற்று காலை அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் மகாதேவன் ஓட்டியுள்ளார்.
பஸ் தேவர்சோலை, 9-வது மைல் அருகே சென்றபோது, எதிரே வந்த லாரி, பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. அதில், பஸ்சின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது.
பஸ்சில், 20 பயணிகள் பயணித்த நிலையில், பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை. காலை நேரத்தில் பஸ் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
அது குறித்து, தேவர்சோலை போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். அதில், லாரி டிரைவர், 10,000 ரூபாய் அபராதம் செலுத்திய பின்னர் சமரசம் ஏற்பட்டது. போக்குவரத்து கழக அதிகாரிகளின் ஆய்வுக்கு பின்னர், பஸ் கூடலுார் பணிமனைக்கு எடுத்து செல்லப்பட்டது.