தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/பயணிகளை ஏற்றாமல் சென்ற பஸ்: நாள்தோறும் மாலை நேரம் 'அப்செட்'

பயணிகளை ஏற்றாமல் சென்ற பஸ்: நாள்தோறும் மாலை நேரம் 'அப்செட்'

பயணிகளை ஏற்றாமல் சென்ற பஸ்: நாள்தோறும் மாலை நேரம் 'அப்செட்'


UPDATED : நவ 17, 2026 07:16 PM

ADDED : நவ 17, 2026 07:15 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 17, 2026 07:16 PM ADDED : நவ 17, 2026 07:15 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குன்னுார்: குன்னுார்- ஊட்டி இடையே இயக்கப்படும் அரசு பஸ்களில் கூட்ட நெரிசல் காரணமாக, அருவங்காடு உட்பட பல்வேறு பகுதிகளின் பயணிகளை ஏற்றாமல் செல்வதால் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

குன்னுார்- ஊட்டி இடையே போதிய அளவில் பஸ்கள் இயக்கப்படாத நிலையில், தற்போது காலை நேரங்களில் பயணிகளின் வசதிக்காக கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில், இன்று (நவ.,17) மாலை, 4:30 மணியில் இருந்து 5:30 மணி வரை ஒரே ஒரு உள்ளூர் பஸ் மட்டுமே இயக்கப்பட்டது.

அந்த பஸ்சிலும் கடும் கூட்ட நெரிசல் இருந்த நிலையில், அருவங்காடு பகுதியில் காத்திருந்த பயணிகளை ஏற்றாமல் சென்றதால் கடும் அதிருப்தி ஏற்பட்டது. தொடர்ந்து வந்த திருப்பூர் அரசு பஸ்சில், 63 பயணிகள் குன்னுார் வரை இருந்த நிலையிலும், நெரிசலில் அருவங்காடு, பாய்ஸ் கம்பெனி பகுதி பயணிகளை ஏற்றி சென்றது. எனவே, இந்த வழித்தடத்தில் மாலை ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us