/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையை சூழ்ந்த புதர்கள் வனவிலங்கு அச்சத்தில் மக்கள்
/
சாலையை சூழ்ந்த புதர்கள் வனவிலங்கு அச்சத்தில் மக்கள்
சாலையை சூழ்ந்த புதர்கள் வனவிலங்கு அச்சத்தில் மக்கள்
சாலையை சூழ்ந்த புதர்கள் வனவிலங்கு அச்சத்தில் மக்கள்
ADDED : அக் 19, 2025 10:13 PM

பந்தலுார்: பந்தலூர் அருகே உப்பட்டி பஜார் பகுதியை ஒட்டிய, சாலையை புதர்கள் சூழ்ந்து வருவதால் வன விலங்குகளின் புகலிடமாக மாறி உள்ளது.
உப்பட்டியில் இருந்து அத்திக்குன்னா வழியாக தேவாலா, கூடலூர் மற்றும் கேரளா மாநிலம் மலப்புரம் செல்லும் சாலை அமைந்துள்ளது.
இந்த சாலையில் உப்பட்டி பஜார் பகுதியை ஒட்டி ஆக்கிரமிப்பில் இருந்த நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடம், நில அளவை செய்து ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
ஆனால் தொடர்ந்து இதை பராமரித்து, நெடுஞ்சாலைத்துறை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளாத நிலையில், சாலையை ஒட்டி புதர்கள் சூழ்ந்து வருகின்றன. அருகே குடியிருப்புகள் அமைந்துள்ள நிலையில், புதர்களில் சிறுத்தை, பாம்புகள் உள்ளிட்ட வன விலங்குகள் வாழ்விடமாக மாறி வருவதால், வாக்கிங் செல்வோர்கள் மற்றும் மாணவர்கள் வனவிலங்குகளால் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலை ஓர புதர்களை சீரமைத்து, தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டியது அவசியம்.