/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி அருகே பெண்ணிடம் வம்பிழுத்த வியாபாரி கைது
/
ஊட்டி அருகே பெண்ணிடம் வம்பிழுத்த வியாபாரி கைது
ADDED : ஆக 13, 2025 08:38 PM

ஊட்டி; காரில் 'லிப்ட்' கொடுப்பதாக கூறி, பெண்ணின் கையைப் பிடித்து இழுத்து கட்டாயப்படுத்திய வியாபாரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஊட்டி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த, 30 வயது மதிக்கத்தக்க பெண்ணுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. பெண்ணின் கணவர் அந்த பகுதியில் கூலி தொழிலாளியாக உள்ளார்.
அந்த பெண், ஊட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பெண்ணின் கிராமத்தில் இருந்து நேரடியாக வர ஊட்டிக்கு சரிவர பஸ் வசதி இல்லாததால், அங்கிருந்து கல்லட்டி சாலைக்கு நடந்து வந்து பஸ் பிடித்து வர வேண்டிய நிலை உள்ளது.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கல்லட்டி சாலையில் பஸ்சுக்காக பெண் காத்திருந்தார். அங்கு வந்த நபர், 'காரில் லிப்ட் கொடுத்து ஊட்டிக்கு அழைத்து செல்வதாகவும் தினசரி இந்த வழியாக தான் நான் வருவேன்,' என, கூறியுள்ளார்.
அந்த பெண், 'லிப்ட் வேண்டாம்,' என, மறுப்பு தெரிவித்துள்ளார். அப்போது காரில் இருந்து இறங்கிய நபர், விடாப்பிடியாக பெண்ணின் கையை பிடித்து இழுத்து லிப்ட் தருவதாக தொந்தரவு செய்துள்ளார்.
அதிர்ச்சி அடைந்த பெண் சப்தம் போட்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் கூடியதால் காரில் வந்த நபர் தப்பி சென்று விட்டார்.
இதுகுறித்து அந்த பெண், ஊட்டி புதுமந்து போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினார்.
தொடர்ந்து, பெண்ணின் கையைப் பிடித்து இழுத்தது தட்டனேரியை சேர்ந்த வியாபாரியான நவநீதன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.