தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/புதர் சூழ்ந்த சாலை: வாகன ஓட்டிகள் அவதி

புதர் சூழ்ந்த சாலை: வாகன ஓட்டிகள் அவதி

புதர் சூழ்ந்த சாலை: வாகன ஓட்டிகள் அவதி


UPDATED : நவ 02, 2026 11:38 AM

ADDED : நவ 02, 2026 11:36 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 02, 2026 11:38 AM ADDED : நவ 02, 2026 11:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பந்தலூர்: பந்தலூர் அருகே உப்பட்டியிலிருந்து அத்திக்குன்னா வழியாக தேவாலா மற்றும் கூடலூர் செல்லும் சாலை அமைந்துள்ளது. அத்திமாநகர் முதல் தேவாலா வரை சுமார் 4- கி.மீ., தூரம் வனப்பகுதிக்கு மத்தியில் அமைந்துள்ள நிலையில், சாலையின் இரண்டு பகுதிகளிலும் புதர்கள் சூழ்ந்து வளர்ந்து காணப்படுகிறது.

குறுகிய சாலையில் புதர்கள் சூழ்ந்து வருவதால், எதிரே வரும் வாகனங்கள் தெரியாமலும், வாகனங்களுக்கு இடம் கொடுக்க முடியாமலும் வாகன ஓட்டுனர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

இரவில் மட்டுமின்றி பகல் நேரங்களிலும் சாலையை யானைகள் கடந்து செல்லும் நிலையில், சாலையோர புதர்களில் வனவிலங்குகள் நிற்பது தெரியாமல், நடந்து செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் பாதிக்கப்படுகின்றனர். மாவட்ட நிர்வாகம் புதர்களை வெட்டிய அகற்றி பாதிப்புகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.என, வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us