ADDED : செப் 19, 2024 09:34 PM
கூடலுார் : கூடலுாரில் வனங்கள், வயல்களில் காணப்படும் பட்டாம் பூச்சிகளை உள்ளூர் மக்கள்; சுற்றுலா பயணிகள் ரசித்தனர்.
நம் மாநிலத்தில், 350 வகை பட்டாம்பூச்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.நீலகிரியில், 250 வகைகள் உள்ளதாக தெரிய வந்துள்ளது. அதில், பெரும்பாலான பட்டாம்பூச்சிகள் முதுமலை, கூடலுாரில் காணப்படுகிறது.
தற்போது, கூடலுார் சாலையோர வனங்கள், வயல்களிலும் வண்ண பட்டாம்பூச்சிகள் கூட்டம் கூட்டமாக பறந்து செல்கின்றன. இதனை உள்ளூர்மக்கள் மட்டுமின்றி, சுற்றுலா பயணிகளும் ரசித்து செல்கின்றனர்.
மக்கள் கூறுகையில், 'கூடலுாரில், இரண்டாம் சீசன் காலங்களில் பல வகையான பட்டாம் பூச்சிகளைகாண முடிகிறது. அனைத்து பட்டாம் பூச்சிகளையும் ஒரே இடத்தில் கண்டு ரசிக்கும் வகையில், பொன்னுார் தோட்டக்கலை பண்ணையில் உள்ள பட்டாம்பூச்சி பூங்காவை மேம்படுத்த வேண்டும்,' என்றனர்.