/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
முட்டைகோசுக்கு விலை குறைவு; மலை மாவட்ட விவசாயிகள் கவலை
/
முட்டைகோசுக்கு விலை குறைவு; மலை மாவட்ட விவசாயிகள் கவலை
முட்டைகோசுக்கு விலை குறைவு; மலை மாவட்ட விவசாயிகள் கவலை
முட்டைகோசுக்கு விலை குறைவு; மலை மாவட்ட விவசாயிகள் கவலை
ADDED : நவ 12, 2024 06:00 AM

கோத்தகிரி ; கோத்தகிரி பகுதியில் அறுவடை செய்யப்படும் முட்டை கோசுக்கு போதுமான விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில், தேயிலை விவசாயத்துக்கு அடுத்தபடியாக, மலை காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. நடப்பாண்டு விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில், விவசாயிகள் கூடுமானவரை, முட்டைகோஸ் பயிரிட்டு பராமரித்து வருகின்றனர்.
குறிப்பாக, கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில், அதிக பரப்பளவில் முட்டைக்கோஸ் பயிரிடப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக, முட்டைகோஸ் அறுவடைக்கு தயாராகி வருகிறது.
தற்போது, ஒரு கிலோ முட்டைக்கோஸ், 15 முதல், 20 ரூபாய் வரை தரத்திற்கு ஏற்ப, மேட்டுப்பாளையம் மண்டிகளில் விற்கப்படுகிறது. உள்ளூர் கடைகளில், 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகள் தோட்டங்களுக்கு செலவிட்ட முதலீட்டை கணக்கிட்டால், இந்த விலை போதுமானது இல்லை. இருப்பினும், மழை தொடரும் பட்சத்தில், தயாரான முட்டைகோஸ், தோட்டங்களில் அழியும் அபாயம் உள்ளது.
இதனை தவிர்க்க, விவசாயிகள் கூடுமானவரை, தயாரான முட்டைகோசை அறுவடை செய்து, லாரிகளில் ஏற்றி, மேட்டுப் பாளையம் மண்டிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்கின்றனர்.
விவசாயிகள் கூறுகையில், 'தோட்டங்களில் அறுவடை செய்யப்படும் முட்டை கோசுக்கு போதுமான விலை கிடைக்காததால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் மழையால், பெரும் நஷ்டம் ஏற்படாமல் இருக்க கிடைக்கும் விலைக்கு விற்பனை செய்து வருகிறோம்,' என்றனர்.