/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
முட்டைக்கோஸ் நாற்று நடவு; விவசாயிகள் ஆர்வம்
/
முட்டைக்கோஸ் நாற்று நடவு; விவசாயிகள் ஆர்வம்
ADDED : ஜூலை 06, 2025 10:44 PM

கோத்தகிரி; கோத்தகிரி பகுதியில் முட்டைக்கோஸ் நாத்து நடவு செய்வதில், விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில், தேயிலைக்கு அடுத்தபடியாக, மலை காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. விதை, உரம் உள்ளிட்ட இடுபொருட்களின் விலையேற்றம், கூலி உயர்வு பயிர் சாகுபடிக்கான செலவினம் அதிகமாக உள்ளது.
நீர் ஆதாரமுள்ள விளைநிலங்களில் சாகுபடி செய்யப்படும் மலை காய்கறிகளுக்கு, போதிய விலை கிடைத்தால் மட்டுமே, விவசாயிகளுக்கு ஓரளவு லாபம் கிடைக்கும். இல்லாத பட்சத்தில், விவசாயிகள் இழப்பை சந்திக்க நேரிடும்.
இருப்பினும், விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில், கூடுமானவரை கடன் பெற்று, விவசாயிகள் மலை காய்கறி பயிரிட்டு வருகின்றனர். நடப்பாண்டு, கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் மழை தொடர்வதால், முட்டைக்கோஸ் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பாத்திகளில் முட்டை கோஸ் விதை விதைத்து, தயாரான நாற்றுக்களை, நிலங்களில் நடவு செய்து வருகின்றனர்.
கோத்தகிரி, நெடுகுளா, வ.உ.சி., நகர், பட்டகொரை, கதகுதொறை மற்றும் கூக்கல்தொறை பகுதிகளில் பல ஏக்கர் பரப்பில் நடவு பணி நடந்து வருகிறது.