/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர்கள் சேர்க்கைக்கு அழைப்பு
/
அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர்கள் சேர்க்கைக்கு அழைப்பு
அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர்கள் சேர்க்கைக்கு அழைப்பு
அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர்கள் சேர்க்கைக்கு அழைப்பு
ADDED : செப் 14, 2025 10:06 PM
பந்தலுார்; 'பந்தலுார் அருகே உப்பட்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடக்கும் மாணவர்கள் சேர்க்கையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொழிற்பயிற்சி நிலையம் வெளியிட்ட அறிக்கை:
உப்பட்டியில் செயல்பட்டு வரும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், 2025-ம் ஆண்டிற்கான பயிற்சியாளர்கள் சேர்க்கையில், பல்வேறு தொழிற் பிரிவுகளுக்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்த மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.
அதில், பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்கான மதிப்பெண் சான்றிதழ், பள்ளி மாற்று சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆதார் எண், வருமான சான்றிதழ் ஆகியவற்றுடன் நேரில் வரவேண்டும். மதிப்பெண் அடிப்படை மற்றும் அரசு விதிகளின்படி நேரடி சேர்க்கை மூலம் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர்.
பயிற்சி கட்டணம் முற்றிலுமாக இலவசமாக வழங்கப்படும் நிலையில், 14 முதல் 40 வரை வயதுவரம்பு உள்ளது. பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது.
அத்துடன் பயிற்சியாளர்களுக்கு தொழிற்பயிற்சி நிலையம் மூலம் உதவித்தொகையாக மாதந்தோறும், 750 ரூபாய், இத்துடன் புதுமை பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம்தோறும், 1,000 ரூபாய் வழங்கப்படும்.
கட்டணமில்லா பஸ் வசதி பாட புத்தகங்கள் மற்றும் வரைபட கருவிகள், சீருடைகள், பாதுகாப்பு காலனிகள் ஆகிய சலுகைகளையும் வழங்கும் நிலையில், படித்த மாணவ, மாணவியர் இதனை பயன்படுத்திக்கொள்ள முன் வரவேண்டும்.
மேலும் தகவல்களுக்கு, 04262--296149, 94990-55709, 96591-52211 ஆகிய எங்களின் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.