/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தற்காப்பு கலை பயிற்சியாளர் நியமனத்திற்கு அழைப்பு
/
தற்காப்பு கலை பயிற்சியாளர் நியமனத்திற்கு அழைப்பு
ADDED : மார் 23, 2025 09:45 PM
ஊட்டி : தற்காப்பு கலை மற்றும் விளையாட்டு வீரர்கள் நியமனத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நீலகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் அன்னை சத்யா குழந்தைகள் இல்ல குழந்தைகளுக்கு தற்காப்பு கலை மற்றும் விளையாட்டு பயிற்சி வழங்க, பயிற்சி பெற்ற நபரை நியமித்து, குழந்தைகளுக்கு பயிற்சி வழங்க தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பயிற்சியாளராக பணிபுரிய விருப்பமுள்ள, நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த, கராத்தே, சிலம்பம் விளையாட்டில் பயிற்சி பெற்ற பெண் பயிற்சியாளர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்படும் தற்காப்பு கலை பயிற்சியாளருக்கு, 9,000 ரூபாய், விளையாட்டு பயிற்சியாளருக்கு, 15 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்படும்.
விருப்பமுள்ள பெண் விண்ணப்பதாரர்கள், கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில், இயங்கி வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ, வரும், 26ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.