/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தனித்துவ விவசாய அடையாள எண் பெறுவதற்கு விவசாயிகளுக்கு அழைப்பு
/
தனித்துவ விவசாய அடையாள எண் பெறுவதற்கு விவசாயிகளுக்கு அழைப்பு
தனித்துவ விவசாய அடையாள எண் பெறுவதற்கு விவசாயிகளுக்கு அழைப்பு
தனித்துவ விவசாய அடையாள எண் பெறுவதற்கு விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : நவ 13, 2025 08:15 PM
கூடலுார்: கூடலுாரில் உள்ள விவசாயிகள் பி.எம்., கிசான் தவணை தொகை மற்றும் மத்திய அரசு மானியம் பெற தனித்துவ விவசாய அடையாள எண் பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கூடலுார் தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கை:
மத்திய அரசின் விவசாயம் தொடர்பான மானிய மற்றும் வரும் காலங்களில், பி.எம்., கிசான் தவணை தொகை பெற, தனித்துவ விவசாய அடையாள எண் அவசியம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கூடலுார் வட்டார விவசாயிகள், தங்கள் பகுதியில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம் அல்லது பொது சேவை மையத்தின் மூலம், தங்கள் ஆதார் எண், இடத்தின் சிட்டா, ஆதாருடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணுடன் பதிவு செய்து தனித்துவ விவசாய அடையாள எண் பெற்று கொள்ளலாம்.
எனவே, விவசாயம் தொடர்பான மானியம் மற்றும் பி.எம்., கிசான் தவணை தொகை தொடர்ந்து கிடைக்க, தனித்துவ விவசாய அடையாள எண் பெறாத விவசாயிகள், தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தனித்துவ அடையாள எண்ணை பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

