தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மத்திய அரசின் மானியத்துடன் சோலார் மின்சக்தி நுகர்வோருக்கு அழைப்பு

 மத்திய அரசின் மானியத்துடன் சோலார் மின்சக்தி நுகர்வோருக்கு அழைப்பு

 மத்திய அரசின் மானியத்துடன் சோலார் மின்சக்தி நுகர்வோருக்கு அழைப்பு


ADDED : பிப் 26, 2026 06:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 26, 2026 06:30 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குன்னுார்: குன்னுாரில் பிரதமரின் சூரிய மின்சக்தி திட்டத்தின் கீழ் மானியத்துடன் சோலார் அமைத்து பயன் பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் பகிர்மான வட்ட கழகம், நீலகிரி மின் பகிர்மான வட்டம் சார்பில், குன்னுார் அந்தோனியார் மேல்நிலை பள்ளி அரங்கில், பிரதமரின் வீடுகளுக்கான சூரிய சக்தி மின் திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.

முகாமிற்கு தலைமை வகித்த நீலகிரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சிவகுமார் பேசுகையில், ''மத்திய அமைச்சகத்தின் கீழ் செயல்படும், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை சார்பில், பிரதமரின் வீடுகள் தோறும் சோலார் மின் திட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் சூரிய ஒளி மின் தகடுகளை பொருத்துவதற்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது. ஒரு கிலோ வாட் அமைப்புக்கு, 30,000 ரூபாய், 2 கிலோ வாட் அமைப்புக்கு, 60 ஆயிரம் ரூபாய், 3 கிலோ வாட் மற்றும் அதற்கு மேல் பொருத்துபவர்களுக்கு, 78 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. இந்த மானியம் நுகர்வோரின் வங்கிக் கணக்கில் நேரடியாக, 7 முதல் 30 நாட்களுக்குள் செலுத்தப்படும். இத்திட்டத்திற்கு வங்கிகள் மூலம் உடனடியாக கடனுதவி வசதியும் செய்து தரப்படுகிறது.

ஒரு கிலோ வாட் சூரிய தகடு மூலம் ஒரு நாளில், 4 முதல் 5 யூனிட்கள் வரை மின்சாரம் உற்பத்தியாகும். இத்திட்டத்தில் இணைய விரும்பும் வீட்டு மின் இணைப்பு உரிமையாளர்கள், மத்திய அரசின் இணையதளங்களின் மூலமாக பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.

முகாமில், சோலார் கம்பெனி வெண்டர்கள் சோலார் பேனல்கள் பொருத்துவது குறித்தும் அதனால் நுகர்வோருக்கு கிடைக்கும் பயன்கள் மற்றும் மின் கட்டண சேமிப்பு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. குன்னுார் கோட்டத்திற்குட்பட்ட அனைத்து உதவி செயற்பொறியாளர்கள், நுகர்வோர் பங்கேற்றனர். முன்னதாக செயற்பொறியாளர் மாதன் வரவேற்றார். உதவி மின் பொறியாளர் ஜான்சன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us