/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பந்தலுார் பகுதியில் பொது மக்களிடம் கோாிக்கை மனுக்கள் வாங்கும் முகாம்

ADDED : மார் 28, 2025 09:10 PM

பந்தலுார்; பந்தலுார் பகுதியில் ஏப்.,9-ம் தேதி மனுநீதிநாள் முகாம் நடைபெற உள்ளது. இதற்காக, பொதுமக்களிடமிருந்து முன்னதாக மனுக்கள் வாங்கும் முகாம் உப்பட்டி தனியார் மண்டபத்தில் நடந்தது.
கிராம நிர்வாக அலுவலர் சண்முகம் வரவேற்றார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தில்குமார், பங்கேற்று பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்று கொண்டார். அதில், நடைபாதை, சாலை, தடுப்பு சுவர், வீடு உள்ளிட்ட வசதிகள் கேட்டு மனுக்கள் வழங்கப்பட்டது.
'முன்னதாக பெறப்படும் மனுக்கள் மீது புதிய நடவடிக்கை மேற்கொண்டு, மனுநீதி நாள் முகாம் அன்று, மாவட்ட கலெக்டர் அதற்குரிய தீர்வை வழங்குவார்,'என, தெரிவிக்கப்பட்டது. முகாமில், உப்பட்டி சுற்றுவட்டார பகுதி மக்கள், கிராம உதவியாளர் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். வி.ஏ.ஓ., மாரிமுத்து நன்றி கூறினார்.