/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பந்தலுார் காலனி சாலையோரம் கால்வாய் சீரமைப்பு பணி தீவிரம்
/
பந்தலுார் காலனி சாலையோரம் கால்வாய் சீரமைப்பு பணி தீவிரம்
பந்தலுார் காலனி சாலையோரம் கால்வாய் சீரமைப்பு பணி தீவிரம்
பந்தலுார் காலனி சாலையோரம் கால்வாய் சீரமைப்பு பணி தீவிரம்
ADDED : டிச 06, 2024 10:50 PM

பந்தலுார் ; பந்தலார் காலனி செல்லும் பகுதி சாலையோரம் மற்றும் குடியிருப்புகளை ஒட்டி கழிவு நீர் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளது.
கால்வாய்களில் புதர்கள் மற்றும் கழிவு பொருட்கள் நிறைந்து காணப்பட்டது. இதனால் கழிவுநீர் வழிந்தோட வழியில்லாமல் தேங்கி நின்று சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வந்தது. இது குறித்து 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களாக நெல்லியாளம் நகராட்சி துாய்மை பணியாளர்கள் மூலம் சீரமைப்பு பணி மேற் கொள்ளப்பட்டது.
நகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,'பொதுமக்கள் கழிவுகளை கால்வாய் மற்றும் நீரோடைகளில் போடகூடாது. மீறும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'என்றனர்.