ADDED : ஏப் 05, 2026 11:09 PM

அ நிறம் | அளவு
ஊட்டி:ஊட்டி தொகுதியில் அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ., கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. பா.ஜ., வேட்பாளராக போஜராஜன் அறிவிக்கப்பட்டார். வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்கு பின், கூட்டணி கட்சியினருடன் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது.
ஊட்டி அருகே, முத்தநாடுமந்தில், தோடர் பழங்குடியின மக்களிடம் ஊட்டி தொகுதி பா.ஜ., வேட்பாளர் போஜராஜன் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். அதேபோல், குன்னுார் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் சாந்திராமு, கூடலுார் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் பொன்ஜெயசீலன் ஆகியோர் கூட்டணி கட்சியினருடன் அந்தந்த பகுதியில் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
