/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கன்டோன்மென்ட் குடிநீர் பிரச்னை; காலி குடங்களுடன் வந்த மக்கள்
/
கன்டோன்மென்ட் குடிநீர் பிரச்னை; காலி குடங்களுடன் வந்த மக்கள்
கன்டோன்மென்ட் குடிநீர் பிரச்னை; காலி குடங்களுடன் வந்த மக்கள்
கன்டோன்மென்ட் குடிநீர் பிரச்னை; காலி குடங்களுடன் வந்த மக்கள்
ADDED : ஜூலை 14, 2025 08:58 PM

குன்னுார்; குன்னுார் வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியத்தில், 4 நாட்களாக குடிநீர் வனியோகம் செய்யப்படாத நிலையில், பொதுமக்கள் காலி குடங்களுடன் போராட்டம் நடத்த திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குன்னுார் வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியம், 1வது வார்டுக்கு உட்பட்ட போகித்தெரு, காவலர் குடியிருப்பு, உட்பட சுற்றுப்புற பகுதிகளில் கடந்த, 4 நாட்களாக குடிநீர் வினியோகம் இல்லாததால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில், குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண மக்கள் காலி குடங்களுடன் போராட்டம் நடத்த திரண்டனர். தொடர்ந்து, கன்டோன்மென்ட் வாரியத்திற்கு சென்று புகார் அளித்தனர்.
குடிநீர் வினியோக மோட்டார் ரூமில், இணைப்பில் இருந்த ஒயர்கள் திருடப்பட்டுள்ளது தொடர்பாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'உடனடியாக சரி செய்து, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என, தெரிவித்ததால் கலைந்து சென்றனர். மோட்டார் ஒயர்கள் திருடிய திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர்.