/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கூடலுாரில் கார் கவிழ்ந்து விபத்து; காயங்களுடன் தப்பிய ஐந்து பேர்
/
கூடலுாரில் கார் கவிழ்ந்து விபத்து; காயங்களுடன் தப்பிய ஐந்து பேர்
கூடலுாரில் கார் கவிழ்ந்து விபத்து; காயங்களுடன் தப்பிய ஐந்து பேர்
கூடலுாரில் கார் கவிழ்ந்து விபத்து; காயங்களுடன் தப்பிய ஐந்து பேர்
ADDED : செப் 14, 2025 10:10 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்; மேல் கூடலுார் அருகே கார், கவிழ்ந்த விபத்தில் கேரளாவை சேர்ந்த, 5 சுற்றுலா பயணிகள் காயங்களுடன் உயிர் தப்பினர்.
கேரளாவை சேர்ந்த, 5 சுற்றுலா பயணிகள் நேற்று காலை காரில் ஊட்டி சென்று விட்டு, மாலை ஊட்டி தேசிய நெடுஞ்சாலை வழியாக கூடலுார் நோக்கி வந்தனர்.
மேல்கூடலுார் அருகே, மாலை, 4:00 மணிக்கு வந்து கொண்டிருந்தபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர வீட்டின் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில், காரில் பயணித்த கேரளா சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். சிகிச்சைக்காக, கூடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போலீசார் விசாரிக்கின்றனர்.