/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ரூ.63 லட்சத்தில் விவசாயிகளுக்கு கேரட், பீட்ரூட் விதை; குறை தீர்க்கும் கூட்டத்தில் தகவல்

ADDED : நவ 24, 2024 11:03 PM

ஊட்டி; ஊட்டியில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தலை வகித்து பேசியதாவது:
மாவட்டத்தில் தேசிய தோட்டக் கலை இயக்கம் மூலம், மத்திய அரசின் வழிகாட்டுதல் படி, 500 சதுர மீட்டர் அளவிற்கு பசுமைக்குடில் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.
மொட்டை மாடிகளில் பசுமை குடில் அமைக்க விரும்பும் விவசாயிகள், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு மற்றும் நில ஆவணங்கள் வழங்கும் பட்சத்தில், அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும்.
அங்கக வேளாண்மை திட்டத்தை செயல்படுத்த, மாநிலத் தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ், நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. மாவட்ட, வட்டார மற்றும் கிராம அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டு, குழுக்கள் மூலம் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தல், இடுப்பொருட்கள் வழங்குதல், செயல் விளக்கங்கள் அளிப்பது போன்றவை செயல்படுத்தப்படுகிறது.
இந்த நடைமுறை, வரும் காலங்களில் விவசாயிகளின் பங்களிப்போடு சிறப்பாக அமையும். 2023- 24ம் ஆண்டில், 420 எக்டர் பரப்பளவிற்கு, ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் மூலம், 63 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கேரட் மற்றும் பீட்ரூட் விதைகள் வழங்கப்பட்டுள்ளது.
சூரிய ஒளியில் இயங்கும் மின்வேலி அமைக்க, விவசாயிகளுக்கு, 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. விவசாயிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம். மாவட்டத்தில், 77 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம், பயிர் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, கலெக்டர் பேசினார்.
தோட்டக்கலை இணை இயக்குனர் சிபிலா மேரி உட்பட பலர் பங்கேற்றனர்.