/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கேரட் விதைப்பு செலவினங்களை குறைக்கலாம்: விவசாயிகளுக்கு தோட்டக்கலை துறை அறிவுரை
/
கேரட் விதைப்பு செலவினங்களை குறைக்கலாம்: விவசாயிகளுக்கு தோட்டக்கலை துறை அறிவுரை
கேரட் விதைப்பு செலவினங்களை குறைக்கலாம்: விவசாயிகளுக்கு தோட்டக்கலை துறை அறிவுரை
கேரட் விதைப்பு செலவினங்களை குறைக்கலாம்: விவசாயிகளுக்கு தோட்டக்கலை துறை அறிவுரை
ADDED : செப் 26, 2024 11:15 PM
கோத்தகிரி : 'நீலகிரி மாவட்டத்தில், கேரட் விதைப்பு செலவினங்களை குறைக்க, விவசாயிகள் முன் வரவேண்டும்,' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தோட்டக்கலை இணை இயக்குனர் சிபிலாமேரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: நீலகிரி மாவட்டத்தில், 4,000 எக்டர் பரப்பளவில் கேரட் பயிரிடப்படுகிறது. உற்பத்தி செலவு அதிகமாக கூடிய, வீரிய ஒட்டு ரகங்களை அதிக அளவில் விவசாயிகள் தேர்வு செய்கின்றனர்.
வீரிய ஒட்டு ரக கேரட் விதைகள், ஒரு கிலோவுக்கு சராசரியாக, 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆட்களை கொண்டு விதைப்பதன் மூலம், ஒரு ஏக்கருக்கு, 2 முதல், 2.5 கிலோ வரை கேரட் விதைகள் தேவை.
இயந்திரத்தை பயன் படுத்தினால் ஒரு கிலோ விதை போதுமானது. இதனால், 30 ஆயிரம் ரூபாய் சேமிக்கலாம். மேலும், சாதாரண முறையைக் காட்டிலும், இயந்திரங்கள் வாயிலாக விதைப்பதற்கான மேட்டுப்பாத்தி அமைத்து விதைத்தால், ஒரு ஏக்கருக்கு, 6,000 ரூபாய் போதுமானது என்பதால், 14 ஆயிரம் ரூபாய் மிச்சப்படுத்தப்படும்.
இயந்திரங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் கேரட், 90 சதவீதம் மகசூல் கிடைப்பதால், கூடுதல் வருமானமாக, 30 ஆயிரம் வரை கிடைக்கும். மொத்தத்தில், ஒரு ஏக்கருக்கு, 94 ஆயிரம் ரூபாய் வரை விவசாயிகள் மிச்சப்படுத்தலாம். கூடுமானவரை இயந்திரங்களை பயன்படுத்தி, உற்பத்தி செலவினை குறைக்க வேண்டும்.
மேலும், சிறிய பரப்பளவில் கேரட் பயிரிடும் விவசாயிகள், இயந்திரங்களை பயன்படுத்துவதில் சிரமம் இருந்தால், சம அளவு விதையுடன், சம அளவு வறுத்த ஓமம் கலந்து விதைப்பதன் வாயிலாக, விதைப்பு செலவு, பாதியாக குறையும்.
எளிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, சாகுபடி செலவினை குறைக்க, குறைந்த விலையில், உள்ளூர் மாற்று வீரிய ஒட்டு ரகங்களை சாகுபடி செய்து, உற்பத்தி செலவை குறைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

