/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மீண்டும் 'கேரிபேக்'! கோத்தகிரி பேரூராட்சியில் 'பிளாஸ்டிக்' தாராளம்; புழக்கம் அதிகரித்தும் கண்டுகொள்ள யாருமில்லை
/
மீண்டும் 'கேரிபேக்'! கோத்தகிரி பேரூராட்சியில் 'பிளாஸ்டிக்' தாராளம்; புழக்கம் அதிகரித்தும் கண்டுகொள்ள யாருமில்லை
மீண்டும் 'கேரிபேக்'! கோத்தகிரி பேரூராட்சியில் 'பிளாஸ்டிக்' தாராளம்; புழக்கம் அதிகரித்தும் கண்டுகொள்ள யாருமில்லை
மீண்டும் 'கேரிபேக்'! கோத்தகிரி பேரூராட்சியில் 'பிளாஸ்டிக்' தாராளம்; புழக்கம் அதிகரித்தும் கண்டுகொள்ள யாருமில்லை
ADDED : ஜன 16, 2025 04:00 AM

கோத்தகிரி: கோத்தகிரி பேரூராட்சியில் தடை செய்யப்பட்ட 'பிளாஸ்டிக்' கேரிபேக் உட்பட தடை செய்யப்பட்ட 'பிளாஸ்டிக்' பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு, 21 வகை 'பிளாஸ்டிக்' பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் இவ்வகை பொருட்களை முழுமையாக தடுக்க, தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, தமிழகம்-கேரளா- கர்நடாக எல்லையில், சோதனை சாவடி அமைக்கப்பட்டு, நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் சோதனையிடப்படுகின்றன.
அதில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால், அதனை பெற குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு மட்காத 'பிளாஸ்டிக்' பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
கடைகள் திடீர் ஆய்வு
இதை தவிர, மாவட்டத்தில் உள்ள அனைத்து வியாபார நிறுவனங்கள்; பெட்டி கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவது குறித்து, மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட குழுவினர் ஆய்வு செய்கின்றனர். பிளாஸ்டிக் இருந்தால், அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்த பணிக்கு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான வியபாரிகள் ஆதரவு அளித்து வருவதால், இந்த திட்டம் வெற்றி பெற்று வருகிறது. பல கடைகளில், அரசின் உத்தரவுபடி, மறு சுழச்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பைகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சில இடங்களில் புழக்கம்
எனினும், மாவட்டத்தின் சில இடங்களில் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பைகளின் புழக்கம் உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட, பெரும்பாலான கடைகளில், மீண்டும் 'கேரிபேக்' உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தாராளமாக புழக்கத்தில் உள்ளது.
'இதனை கட்டுப்படுத்த வேண்டும்' என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து புகார் அளித்தும் வருகின்றனர். மேலும், பள்ளி, கல்லுாரி, கிராமங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அதிகாரிகளுக்கு புகார் அளிக்கும் நேரங்களில் மட்டும் கண் துடைப்புக்காக நகர பகுதிகளில்ஆய்வு நடத்தப்பட்டு, தடை செய்யப்பட்ட 'பிளாஸ்டிக்' பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.
மறுபுறம், அதிகாரிகள் ஆய்வுக்கு செல்லும் முன்பு, சில பேரூராட்சி அலுவலகங்களில் இருந்து தகவல் போய்விடுவதாகவும் புகார் உள்ளது. இதனால், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை, பலர் பதுக்கி வைக்க வைப்பதாகவும் மாவட்ட நிர்வாகத்துக்கு புகார்கள் சென்றுள்ளன.
அதிகாரிகள் கூறுகையில், 'மாவட்டத்தில் உள்ள நகரம், கிராமப்பகுதிகளில் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறோம். சில இடங்களில் இதுபோன்ற தடை செய்யப்பட்ட பைகள் உள்ளன. அவற்றை உடனடியாக பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுப்படுகிறது. அபராதமும் விதிக்கப்படுகிறது. பொது மக்களும்; வியாபாரிகளும் மட்காத பிளாஸ்டிக் ஒழிப்பு பணிக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்,' என்றனர்.