தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மாயார் ஆற்றில் வாகனங்களில் கொண்டு சென்ற ஓட்டுப்பெட்டிகள்

 மாயார் ஆற்றில் வாகனங்களில் கொண்டு சென்ற ஓட்டுப்பெட்டிகள்

 மாயார் ஆற்றில் வாகனங்களில் கொண்டு சென்ற ஓட்டுப்பெட்டிகள்


ADDED : ஏப் 22, 2026 11:16 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 22, 2026 11:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோத்தகிரி: கோத்தகிரி தெங்குமரஹாடா பகுதியில், இரவில் மாயாற்றில் வாகனங்களில் ஓட்டுப்பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில், தெங்குமரஹாடா கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்திற்கு, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்; ஈரோடு மாவட்டம் பவானிசாகர் வழியாக சாலை வசதி இல்லாத நிலையில், மாயாற்றை கடந்து சென்று வர வேண்டும்.

இந்த ஊராட்சியில், 'தெங்குமரஹாடாவில் இரண்டு; அல்லி மாயார், சித்திரப்பட்டி ஆகிய பகுதிகள் அடங்கிய, கல்லம்பாளையத்தில் ஒன்று' என, மூன்று பூத்கள் உள்ளன. இந்த ஊராட்சியில், மொத்தம், 1,543 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் நடப்பதை ஒட்டி, தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சாலை வசதி இல்லாத நிலையில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உள்ள பெட்டிகளை,தேர்தல் நடத்தும் அலுவலர்கள், இரவு, 7:30 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் வாகனங்களை ஆற்றில் இறக்கி தெங்குமரஹாடாவுக்கு கொண்டு சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us