/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கால்நடைகள் முகாம்; பயணிகளுக்கு இடையூறு
/
கால்நடைகள் முகாம்; பயணிகளுக்கு இடையூறு
ADDED : ஜூலை 04, 2025 09:38 PM

கோத்தகிரி; கோத்தகிரி பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் நாள்தோறும் கால்நடைகளின் நடமாட்டம் இருந்து வருவதால், பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுஉள்ளது.
கோத்தகிரி பஸ் நிலையத்தில் இருந்து சமவெளி உட்பட, உள்ளூர் பகுதிகளுக்கு, 50க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தவிர கிராமங்களுக்கு, மினி பஸ்களும் இயக்கப்படுகிறது.
இந்நிலையில், நாள்தோறும் கால்நடைகள் பஸ் நிலையத்திற்குள் நடமாடுவது தொடருகிறது. பயணிகள் அமரும் இருக்கை அருகே, சில நேரங்களில் அவை படுத்து விடுவதால், பயணிகளுக்கு இடையூறு அதிகரித்துள்ளது.
தவிர பஸ்கள், 'ரேக்' களில் ஒருங்கே நிறுத்த முடியாமல், நெரிசல் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட நிர்வாகம், கால்நடைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதுடன், சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.