/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கால்நடைகள் வேட்டை: கூண்டில் சிக்கிய புலி
/
கால்நடைகள் வேட்டை: கூண்டில் சிக்கிய புலி
ADDED : ஜன 29, 2024 11:55 PM

பந்தலுார்;நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள கேரள மாநில பகுதியில் கால்நடைகளை கொன்ற புலி கூண்டில் சிக்கியது.
நீலகிரி மாவட்ட எல்லையை ஒட்டிய, கேரளா மாநிலம் வயநாடு கொலவப்பாரா, சூரல்மலா, அரிவயல் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக, முகாமிட்ட ஒரு புலி பத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளை வேட்டையாடி உள்ளது.
தொடர்ந்து வனத்துறையினர் புலியை பிடிப்பதற்காக வனச்சரகர் அப்துல் சமது தலைமையிலான குழுவினர், அப்பகுதியிலுள்ள காபி தோட்டங்களில் கூண்டு வைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அதில், நேற்று முன்தினம், 10 வயதுடைய ஆண் புலி கூண்டில் சிக்கியது. சுல்தான் பத்தேரியில் உள்ள, விலங்குகள் மீட்பு மையத்திற்கு புலியை கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதில், புலியின் கால் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதுடன் பற்களும் உடைந்து இருப்பது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து புலி திருச்சூர் மிருக காட்சி சாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
கேரள வனத்துறையினர் கூறுகையில்,' அங்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு உயர் அதிகாரிகளின் ஆலோசனைப்படி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.
புலி பிடிபட்டதால் இப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.