ADDED : ஏப் 15, 2026 06:47 PM

அ நிறம் | அளவு
கோத்தகிரி: கோத்தகிரி ஒரசோலை சாலையில், கூட்டமாக கால்நடைகள் உலா வருவதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.
கோத்தகிரி, குன்னுார், ஊட்டி வழித்தடத்தில் அரசு பஸ்கள் உட்பட, தனியார் வாகனங்களின் இயக்கம் அதிகரித்து காணப்படுகிறது. தவிர, கிராம புறங்களுக்கு சென்று வரும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில், 'கால்ப்லிங்ஸ்' ஒரசோலை இடையே அரசு போக்குவரத்து கழக பணிமனை பகுதியில், நாள்தோறும் கூட்டமாக கால்நடைகள் உலாவருவது தொடர்கிறது. மேலும், சாலையில் மர நிழலில் அவை நீண்ட நேரம் படுத்து விடுவதால், வாகனங்கள் சென்று வருவதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் சாலையில் கால்நடை நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பது அவசியம்.
