/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி நகர சாலைகளில் கால்நடைகள் உலா
/
ஊட்டி நகர சாலைகளில் கால்நடைகள் உலா
ADDED : செப் 21, 2025 10:42 PM

ஊட்டி; ஊட்டி நகர சாலைகளில், கால்நடைகள் உலா வருவதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.
சுற்றுலா நகரமான ஊட்டியில், சுற்றுலா வாகனங்கள் மற்றும் உள்ளூர் வாகனங்களில் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நகரப் பகுதியில் போதிய 'பார்க்கிங்' வசதி இல்லாமல், வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுவதால், நெரிசல் தொடர்கிறது. போக்குவரத்தில் நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் திணற வேண்டிய நிலை உள்ளது.
இந்நிலையில், ஊட்டி எட்டின்ஸ் சாலை, கமர்சியல் சாலை மட்டும் ஐந்துலாந்தர் பகுதிகளில் கூட்டமாக கால்நடைகள் உலா வருகின்றன.
அவை அவ்வப்போது, சாலையில் நீண்ட நேரம் படுத்து விடுவதால், வாகனங்கள் சென்று வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, போக்குவரத்து நிறைந்த சாலைகளில் உலா வருவதை, நகராட்சி நிர்வாகம் கட்டுப்படுத்துவதுடன், சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.