/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மஞ்சக்கம்பை உரியம்மன் கோவிலுக்கு சிமென்ட் நடைபாதை
/
மஞ்சக்கம்பை உரியம்மன் கோவிலுக்கு சிமென்ட் நடைபாதை
ADDED : மார் 07, 2024 04:32 AM
மஞ்சூர், : மஞ்சக்கம்பை உரியம்மன் கோவிலுக்கு, 6 லட்சம் ரூபாயில் சிமென்ட் நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது.
'பாலகொலா ஊராட்சிக்கு உட்பட்ட மஞ்சக்கொம்பை பஜார் மானிஹாடா கோவில் முதல் உரியம்மன் கண்டி வரை, சிமென்ட் சாலை அமைக்க வேண்டும்,' என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், பாலகொலா ஊராட்சி நிர்வாகம், 14-வது நிதிக்குழு மானிய நிதியில், 6 லட்சம்ரூபாய் நிதி ஒதுக்கி சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடம்பணிகள் ஒப்படைக்கப்பட்டு நடந்து வருகிறது.
நடந்து வரும் பணிகளை பாலகொலா ஊராட்சி துணை தலைவர் மஞ்சை மோகன், உரியம்மன் கோவில் நிர்வாகிகள் சுப்ரமணி, மஞ்சக்கம்பை பஜார் தலைவர் விஸ்வன் உட்பட பலர் பங்கேற்றனர்.

