/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இத்தலார் அரசு பள்ளியில் நுாற்றாண்டு விழா நிகழ்ச்சி
/
இத்தலார் அரசு பள்ளியில் நுாற்றாண்டு விழா நிகழ்ச்சி
இத்தலார் அரசு பள்ளியில் நுாற்றாண்டு விழா நிகழ்ச்சி
இத்தலார் அரசு பள்ளியில் நுாற்றாண்டு விழா நிகழ்ச்சி
ADDED : மார் 24, 2025 10:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி; இத்தலார் ஊராட்சி ஒன்றிய துவக்கபள்ளியில் நுாற்றாண்டு விழா நடந்தது.
ஊட்டி அருகே உள்ள, இத்தலார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் நுாற்றாண்டு விழா நிகழ்ச்சி பள்ளியில் நடந்தது. ஊட்டி வட்டார கல்வி அலுவலர் கார்த்திக் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் கனகமணி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், மாணவர்களின் மாறுவேட போட்டி, பேச்சுதிறன், பாடல், கதை, நாடகம் போன்றவை இடம்பெற்றது. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து நடந்த படுகரின மக்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது. ஆசிரியர் சந்திரகலா நன்றி கூறினார்.