/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் மனித நேய வார விழா
/
பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் மனித நேய வார விழா
ADDED : ஜன 29, 2024 11:46 PM
ஊட்டி;ஊட்டி எம்.பாலாடா பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்தில் மனித நேய வார விழா நிகழ்ச்சி நடந்தது.
நீலகிரி மாவட்ட போலீசார் சார்பில், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் மனித நேய வார விழா நிகழ்ச்சி, ஊட்டி அருகே எம்.பாலாடா பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏ.டி.எஸ்.பி., சவுந்திரராஜன் தலைமை வகித்தார்.
ரூரல் டி.எஸ்.பி., விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் மத நல்லிணக்க விழிப்புணர்வு குறித்து தெரிவிக்கப்பட்டது.
மேலும், மனிதநேயம், ஆபத்தில் சிக்கியவர்களுக்கு உடனடியாக உதவுதல், மத நல்லிணக்கம், பெரியவர்களுக்கு மரியாதை செய்தல், அன்பு செலுத்துதல் குறித்தும் விளக்கப்பட்டது.
அப்பகுதியை சேர்ந்த பழங்குடியினர், அரசு பள்ளி மாணவ, மாணவியர், ஊர் பிரமுகர்கள் பங்கேற்றனர்.