/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'ஏழாவது ஊதிய நிலுவை தொகை வழங்க வேண்டும்' மத்திய செயற்குழு கூட்டம் தீர்மானம்

ADDED : அக் 21, 2024 06:15 AM
ஊட்டி : 'ஊட்டியில் நடந்த செயற்குழு கூட்டத்தில் ஏழாவது ஊதிய குழு நிலுவை தொகையை அரசு உடனே வழங்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டது.
ஊட்டியில், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மத்திய செயற்குழு கூட்டம் நடந்தது. மாநிலத் தலைவர் அமிர்தகுமார் தலைமை வகித்தார்.
இக்கூட்டத்திற்கு பின் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,'பல ஆண்டுகளாக நிலுவையிலுள்ள பங்களிப்பு ஒய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து விட்டு,பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும். சரண் விடுப்பு சலுகையினை மீண்டும் வழங்கவும், 21 மாத 7-வது ஊதிய குழு நிலுவை தொகை வழங்க வேண்டும்.
காலிப்பணியிடங்களை நிரப்பவும், மருத்துவக் காப்பீடு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் , சத்துணவு , அங்கன்வாடி, ஊர்ப்புற நூலகர்கள், துப்புரவு பணியாளர்கள் , உள்ளிட்ட பணியாளர்களுக்கு தேர்தல் அறிக்கையில் தெரிவித்ததை போல பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உட்பட, 46 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன,' என்றார்.
இக்கூட்டத்தில், மத்திய சட்ட ஆலோசகர் கவி வீரப்பன், மாநில துணைத் தலைவர்கள் ராஜேந்திரன், அரவிந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.