/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
திருக்குறளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மத்திய அரசின் கன்டோன்மென்ட் வாரியம்
/
திருக்குறளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மத்திய அரசின் கன்டோன்மென்ட் வாரியம்
திருக்குறளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மத்திய அரசின் கன்டோன்மென்ட் வாரியம்
திருக்குறளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மத்திய அரசின் கன்டோன்மென்ட் வாரியம்
ADDED : ஆக 21, 2025 07:59 PM

குன்னுார்; குன்னுார் அருகே, முதன் முதலாக திருவள்ளுவர் சிலை வைத்துள்ள, வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியத்தில், தற்போது தமிழ், இந்தி ஆங்கிலத்தில், திருக்குறள் எழுதி வைக்கப்பட்டுள்ளது.
குன்னுார் வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியம், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு கடந்த, 2013ல் மாவட்டத்தில் முதல் முறையாக திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டது. தமிழுக்கு மத்திய அரசு பல்வேறு முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில், தற்போது, வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியத்திலும் திருவள்ளுவரின் திருக்குறளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், 'தமிழ், இந்தி, ஆங்கிலம்,' என, மூன்று மொழிகளிலும் எழுதப்பட்ட திருக்குறள்கள் அலுவலகத்தின் ஒவ்வொரு அறைகளிலும் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வாரிய முதன்மை நிர்வாக அதிகாரி வினீத் பாபா சாகிப் லோட்டே கூறுகையில், ''தமிழர்களின் பண்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக, திருவள்ளுவர் எழுதிய, திருக்குறளில்,'அறம், பொருள், இன்பம்,' என்ற தொகுப்புகளில், 133 அதிகாரங்களை கொண்டு, 'வாழ்வியல், அறநெறி, கல்வி, ஒழுக்கம், அரசியல், நட்பு,' என, உலகின் அனைத்து பொது மறைகளையும் அறிந்து கொள்ளும் வகையில், 2000 ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டுள்ளது.
என்றென்றும் போற்றக்கூடிய இந்த திருக்குறளை அனைவரும் படித்து அதனை பின்பற்ற வேண்டும். இதனை வலியுறுத்தும் வகையில், அலுவலகங்களுக்கு வரும், அனைவரும் படிக்கும் வகையில் மும்மொழியில் எழுதப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் நிகழ்ச்சிகளில் பரிசுகள் வழங்கும் போது, திருக்குறள் புத்தகம் வழங்கி ஊக்குவிக்கப்படும்,'' என்றார்.