ADDED : மார் 14, 2026 06:54 AM

அ நிறம் | அளவு
கூடலுார்: கூடலுார், பந்தலுாரில் போலீசார் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரின் கொடி அணிவகுப்பு நடந்தது.
சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், பொது மக்களிடம் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கூடலுார் போலீசார் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரின் அணிவகுப்பு நடந்தது.
கூடலுார் நகராட்சி அலுவலகம் அருகே, துவங்கிய ஊர்வலத்த்தை டி.எஸ்.பி., வசந்தகுமார் துவக்கி வைத்தார்.
ஊர்வலம், ஊட்டி தேசிய நெடுஞ்சாலை பழைய கோர்ட் சாலை வழியாக சென்று போலீஸ் ஸ்டேஷனில் நிறைவு பெற்றது. இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திர பிரசாத், ரவிவர்மா, சுப்புரத்தினம் ராஜதுரை உட்பட பலர் பங்கேற்றனர். இதேபோல, பந்தலுார் சுற்றுப்புற பகுதிகளிலும் அணிவகுப்பு நடந்தது.
