/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பொறியியல் கல்லுாரி தன்னாட்சி அந்தஸ்து பெற்றதற்கான விழா
/
பொறியியல் கல்லுாரி தன்னாட்சி அந்தஸ்து பெற்றதற்கான விழா
பொறியியல் கல்லுாரி தன்னாட்சி அந்தஸ்து பெற்றதற்கான விழா
பொறியியல் கல்லுாரி தன்னாட்சி அந்தஸ்து பெற்றதற்கான விழா
ADDED : ஆக 26, 2025 09:36 PM

குன்னுார்; கேத்தி சி.எஸ்.ஐ., பொறியியல் கல்லுாரி தன்னாட்சி அந்தஸ்து பெற்றதற்கான விழா கொண்டாடப்பட்டது.
அதில், கல்லுாரி தலைவரான, கோவை மண்டல சி.எஸ்.ஐ., பிஷப் திமோத்தி ரவீந்தர் பேசியதாவது:
இந்த கல்லுாரியில், 26 ஆண்டுகளில் 25,000 மாணவ, மாணவியர் பட்டம் பெற்றுள்ளதுடன், உள்நாடு வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர். கடந்த ஜூலை, 28ல் மத்திய அரசின் கல்வி அமைச்சக, பல்கலை கழக மானியக் குழு, கல்லுாரிக்கு, 2030 வரையில் சுயாட்சி அந்தஸ்து வழங்கியது. இங்கு தொழில்நுட்ப பூங்காவில், மாணவர்கள் தொழில் வளர்ப்பு வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
படைப்பாக்க திறன் கொண்ட நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இளைய தலைமுறையினர் சிறப்பாக பயிற்சி பெற்றால் இளம் விஞ்ஞானிகளாக உருவாகலாம்.
அடுத்த, ஐந்து ஆண்டுகளில் கல்லுாரி பல்கலை கழகம் அந்தஸ்து அடையும்,''என்றார்.
தாளாளர் காட்வின் டேனியல், இயக்குநர் டாக்டர் அருமைராஜ், முதல்வர் மெர்சி சாந்தி முன்னிலை வகித்தனர். மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.