/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கர்ப்பப்பை இலவச அறுவை சிகிச்சை: பெ.நா.பாளையம் அரசு மருத்துவமனையில் நல்ல துவக்கம்
/
கர்ப்பப்பை இலவச அறுவை சிகிச்சை: பெ.நா.பாளையம் அரசு மருத்துவமனையில் நல்ல துவக்கம்
கர்ப்பப்பை இலவச அறுவை சிகிச்சை: பெ.நா.பாளையம் அரசு மருத்துவமனையில் நல்ல துவக்கம்
கர்ப்பப்பை இலவச அறுவை சிகிச்சை: பெ.நா.பாளையம் அரசு மருத்துவமனையில் நல்ல துவக்கம்
ADDED : ஜன 10, 2024 11:54 PM

பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனையில் நேற்று, முதல் முதலாக கர்ப்பப்பை நீக்கம் செய்யும் அறுவை சிகிச்சை இலவசமாக மேற்கொள்ளப்பட்டது.
பெரியநாயக்கன்பாளையம் ரயில்வே பீடர் ரோட்டில், பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. கூடலூர் நகராட்சி, பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம், வீரபாண்டி பேரூராட்சிகள் நாயக்கன்பாளையம், பிளிச்சி ஊராட்சிகளில் வசிக்கும் பொது மக்களுக்கும்,பிற பகுதிகளில் இருந்து சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கும், உரிய மருத்துவ வசதிகள் இலவசமாக அளிக்கப்படுகின்றன. இங்கு நேற்று முதன் முதலாக காரமடையைச் சேர்ந்த, 51 வயது பெண்ணுக்கு கர்ப்பப்பை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.
கர்ப்பப்பை நீக்கம்
இது குறித்து, பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் சேரலாதன் கூறுகையில், இங்கு சராசரியாக நாள் ஒன்றுக்கு, 600 வெளிப்புற நோயாளிகள் மருத்துவ உதவி மற்றும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தவிர, இங்கு, இலவசமாக சாதாரண குழந்தை பிறப்பு, சிசேரியன் வாயிலாக குழந்தை பிறப்பு, அரசின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு சட்டபூர்வமான கரு கலைப்பு சேவைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கர்ப்பிணிகளுக்கு சுக பிரசவம் நடக்க யோகாசன பயிற்சிகள், உரிய நிபுணர்களின் உதவியோடு அளிக்கப்படுகின்றன. தற்போது, 56 படுக்கை வசதிகள் இங்கு உள்ளன. இதை அதிகப்படுத்த, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ரூ.2 லட்சம் செலவு
இங்கு முதல் முதலாக காரமடையை சேர்ந்த, 51 வயது பெண்ணுக்கு கர்ப்பப்பை நீக்கம் செய்யும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. இது தனியார் மருத்துவமனைகளில், மேற்கொள்ள, 1.5 லட்சம் முதல், 2 லட்சம் ரூபாய் வரை செலவாகும். இதை அரசு மகளிர் மருத்துவர் டாக்டர் லுபைனா மேற்கொண்டார்.
இங்கு, வாரந்தோறும் புதன்கிழமை கர்ப்பப்பை தொடர்பான அறுவை சிகிச்சைகள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. கர்ப்பப்பையில் கட்டி மற்றும் கர்ப்பப்பை நோய் தொடர்பான சிகிச்சைகள் இந்த மருத்துவமனையில் இலவசமாக வழங்கப்படுகின்றன. இதை பெண்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
கீர்த்தனா பொது மருத்துவர்களாகவும், டாக்டர்கள் தீபா, பார்கவி ஆகியோர் குழந்தைகள் நல மருத்துவர்கள் ஆகவும் காது, மூக்கு, தொண்டை மருத்துவராக டாக்டர் லேகா, தோல் சிகிச்சை டாக்டர் ராஜேஷ், சித்த வைத்திய பிரிவில் டாக்டர் சங்கீதா ஆகியோர் பணியாற்றுகின்றனர்.
பொதுமக்கள், பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனையில் அளிக்கப்படும் இலவச சிகிச்சைகளை பெற்று பயனடையலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.