/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கவுன்சிலர்கள் மீது நடவடிக்கை கோரி தலைவர் புகார் மனு
/
கவுன்சிலர்கள் மீது நடவடிக்கை கோரி தலைவர் புகார் மனு
கவுன்சிலர்கள் மீது நடவடிக்கை கோரி தலைவர் புகார் மனு
கவுன்சிலர்கள் மீது நடவடிக்கை கோரி தலைவர் புகார் மனு
ADDED : ஜூன் 03, 2025 11:36 PM
பந்தலுார்,; நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் நகராட்சியில் மொத்தம், 21 வார்டுகள் உள்ளன. இந்த நகராட்சியில் பழங்குடியின பெண் சிவகாமி தலைவராக உள்ளார்.
இந்நிலையில், நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் முறையாக பங்கேற்காதது குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சபாநாயகர், நகராட்சி நிர்வாக இயக்குனருக்கு அனுப்பிய புகார் மனுவில்,
'நெல்லியாளம் நகராட்சியில், கடந்த மூன்று கூட்டத்துக்கான அழைப்பாணையை, 12 கவுன்சிலர்கள் பெற்று வைத்து கொண்டும். சிலர் வாங்க மறுத்தும் பங்கேற்கவில்லை.
அதில், தி.மு.க., சேர்ந்த, 4-வது வார்டு கவுன்சிலர் ஸ்ரீகலா என்பவர் அரசின் அனுமதி பெறாமல், வெளிநாடு சென்று வந்துள்ளார். இவர்கள் மீது நகராட்சி உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் மற்றும் அரசியலமைப்பு சட்ட பிரிவின்படி, சட்டப்பிரிவு, 46-பி - ன் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, கூறியுள்ளார்.
சிவகாமி கூறுகையில், ''பழங்குடியினத்தை சேர்ந்த நான் தலைவராக இருப்பதை, ஏற்றுக்கொள்ள இயலாத சில கவுன்சிலர்கள், நகராட்சியின் செயல்பாடுகளில் குளறுபடி செய்ய வேண்டும் எனும் நோக்கில், இதுபோன்று செயல்படுகின்றனர். இதனால், தமிழக அரசின் திட்டங்களை முழுமையாக மக்களுக்கு சென்று சேர்க்க முடியவில்லை. இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, நகராட்சியின் வளர்ச்சி பணி நல்ல நிலையில் இருக்கும்,'' என்றார்.