/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாமுண்டீஸ்வரி கோவில் கும்பாபிேஷகம்
/
சாமுண்டீஸ்வரி கோவில் கும்பாபிேஷகம்
ADDED : ஏப் 16, 2025 09:21 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே கொளப்பள்ளி ரூபிமைன்ஸ் பகுதியில், ஸ்ரீ சாமுண்டீஸ்வரி கோவில் கட்டப்பட்டது. கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிசேக நிகழ்ச்சி நடந்தது.
அதன்படி, 15-ம் தேதி மாலை, 4:-30 பாடசாலை வீதி மாரியம்மன் கோவிலில் இருந்து புனித நதிகளின் தீர்த்தங்கள், தீர்த்த குடங்கள், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
தொடர்ந்து, முதல்கால யாக பூஜை, விக்னேஷ்வர பூஜை, பஞ்சகவ்யம், புண்யாகம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. நேற்று காலை இரண்டாம் கால யாக பூஜை, மங்கள இசையுடன் புண்யாகம், பஞ்சகவ்ய பூஜை, ஆலய நிலவு பூஜை, நாடி சந்தனம், வேதிக அர்ச்சனை, மகா பூர்ணாவுதி, மகா தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டது.
குருக்கள் சர்வசாதகர் தியாகராஜன் குருக்கள் தலைமையில் மகா கும்பாபிஷேகம் நடத்தி, புனித நீர் தெளிக்கப்பட்டது.மேலும், அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர், விழா கமிட்டியினர் உட்பட பலர் செய்திருந்தனர்.