ADDED : மார் 15, 2026 05:00 AM
நீலகிரி மாவட்டத்தில் நாளை, மழைக்கு வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
தென்னிந்திய பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதன் காரணமாக, தென் மாவட்ட கடலோர பகுதிகளில், இன்று லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதேபோல், நீலகிரி மாவட்டத்தில், நாளை லேசான மழை பெய்யும்.
தென் மாவட்டங்கள், வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில்,வரும் 17ம் தேதி இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வரும் 18, 19 மற்றும் 20ம் தேதிகளில், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், நாளை முதல், வரும் 18ம் தேதி வரை, அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட, சற்று குறைவாக இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நமது நிருபர்-:
