தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ சந்திரா காலனியில் அடிப்படை வசதி இல்லை: நாள்தோறும் மக்கள் அவதி

 சந்திரா காலனியில் அடிப்படை வசதி இல்லை: நாள்தோறும் மக்கள் அவதி

 சந்திரா காலனியில் அடிப்படை வசதி இல்லை: நாள்தோறும் மக்கள் அவதி


ADDED : பிப் 13, 2026 05:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2026 05:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குன்னுார்: குன்னுார் நகராட்சி, 16வது வார்டில் அடிப்படை வசதிகளை செய்து தராமல் உள்ளதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

குன்னுார் நகராட்சிக்கு உட்பட்ட, 16வது வார்டில் சந்திரா காலனி உள்ளது. அதில், கீழ் கரோலினா செல்லும் சாலைக்கு மேற் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் நடைபாதை, கழிவுநீர் கால்வாய், தடுப்பு சுவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் கீழ் கரோலினா செல்லும் சாலை சீரமைப்பு பணிக்காக, நகராட்சி தலைவி சுசீலா மற்றும் கவுன்சிலர் செல்வி உட்பட தி.மு.க., கவுன்சிலர்கள், கட்சியினர் பங்கேற்றனர்.

அப்போது அங்கு வந்த மக்கள், நடைபாதை, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தியும் ஆய்வு செய்யாமல், சரி செய்து தருவதாக கூறி சென்றனர்.

மக்கள் கூறுகையில், 'மிகவும் உயரமான இடத்தில் உள்ள வீடுகளுக்கு செல்லும் நடைபாதை பெயர்ந்து பல ஆண்டுகளாகியது. நோயாளிகளை தொட்டில் கட்டி சுமந்து செல்லும் அவலம் தொடர்கிறது.

' சீரமைத்து தர பலமுறை நகராட்சிக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இங்குள்ள கால்வாயில், கழிவுநீர் எங்கு செல்கிறது என்று தெரியாமல் உள்ளது. மழை காலங்களில் குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த பகுதியை ஆய்வு மேற்கொள்ள, தலைவர், கவுன்சிலரிடம் கூறியும் ஆய்வு செய்யாமல் சென்று விட்டனர். தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். தேர்தல் நேரத்தில் ஓட்டு கேட்க வரும் கட்சியினர் தேர்தலுக்கு முன் இப்பகுதியை சீரமைத்து தர வேண்டும்,' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us