/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
செயலாளர்கள் மாற்றம்; பணிகள் பாதிப்பு
/
செயலாளர்கள் மாற்றம்; பணிகள் பாதிப்பு
ADDED : ஜன 03, 2024 11:31 PM
மேட்டுப்பாளையம் : கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மருதூர் ஊராட்சியில் அடிக்கடி செயலாளர்கள் மாற்றப்படுவதால் மக்கள் பணி பாதிக்கப்படுகிறது.
மருதூர் ஊராட்சியில் 20க்கும் மேற்பட்ட பெரிய கிராமங்கள், 40க்கும் மேற்பட்ட சிறிய கிராமங்கள் உள்ளன. 12 வார்டுகள் உள்ளன. 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
மருதூர் ஊராட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் 9 முறை ஊராட்சி செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
செயலாளர்கள் மாற்றத்தின் போது, உடனடியாக புதிய செயலாளர் பணிக்கு வருவதில் தாமதம் ஏற்படுகிறது. 15 நாட்கள் முதல் 2 மாதங்கள் வரை செயலாளர் இன்றி ஊராட்சி நிர்வாகம் பணி பாதிக்கப்படுகிறது.
தற்போது பணியில் இருந்த செயலாளரும் கடந்த 1ம் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இன்னும் புதிய செயலாளர் பணிக்கு வரவில்லை. இதனால் மருதூரில் நிர்வாக பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மருதூர் மக்கள் கூறுகையில்,''பல்வேறு பணிகளுக்காக ஊராட்சி அலுவலகம் தினமும் வந்து செல்கின்றோம். செயலாளர் இல்லாத காரணத்தினால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஆன்லைன் தொடர்பான அனுமதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது,'' என்றனர்.-