/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தமிழகத்தில் தேசிய சிந்தனையுடன் மாற்றம் வர வேண்டும்: தமிழிசை பேட்டி பா.ஜ., முன்னாள் மாநில தலைவர்

ADDED : செப் 21, 2024 05:53 AM

கோத்தகிரி: நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில், பா.ஜ., சார்பில், தீவிர உறுப்பினர் சேர்க்கை குறித்த நிர்வாகிகள்ஆலோசனை கூட்டம் நடந்தது.
அதில் பங்கேற்ற, பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் தமிழிசை நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
நீலகிரி மாவட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை இலக்கு ஒரு லட்சம் ஆகும். ஆரோக்கியமான அரசியலை முன்னெடுத்து செல்ல கூடிய, இக்கட்சியில் மக்கள் உறுப்பினராக சேர வேண்டும்.
சிறுவாணி தண்ணீர், கோவை சுற்றுவட்டார பகுதிகளுக்கு வாழ்வாதாரமாக உள்ளது. இதனை தடுத்து அட்டபாடியில் தடுப்பணை கட்ட கேரளா அரசு முயற்சி செய்கிறது. அதற்கு, மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. தமிழகத்தில் தேசிய சிந்தனையுடன் கூடிய மாற்றம் வர வேண்டும்.
திருமாவளவன், 'தன்னை முதலமைச்சராக மக்கள் சிந்திக்க வேண்டும்,' என, கூறுகிறார். அப்படி எனில், அவர் தி.மு.க., கூட்டணியில் இருக்கிறாரா;இல்லையா என்பது தெரியாது. திருப்பதி கோவில் லட்டு பிரச்னை வருத்தம் அளிக்கிறது. இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். உதயநிதி துணை முதல்வராவது நாட்டுக்கு நல்லதல்ல. நடிகர் விஜய், அக்., 27ம் தேதி மாநாடு நடத்த முடிவு செய்துள்ளார். அவர் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில், பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கிறார்.
அவரும் தி.மு.க., போன்று, அதே பாதையில் செல்வதை போல உள்ளது. மாநாட்டில் அவர் எடுக்கும் முடிவுகளை பார்த்து தான் கருத்து கூற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட தலைவர் மோகன்ராஜ், மாவட்ட பொது செயலாளர்கள் குமார், பரமேஸ், மாநில செயற்குழு உறுப்பினர் போஜராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.