/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அதிகரட்டி அரசு பஸ் இயக்கத்தில் மாற்றம் பயணிகள் பாதிப்பு
/
அதிகரட்டி அரசு பஸ் இயக்கத்தில் மாற்றம் பயணிகள் பாதிப்பு
அதிகரட்டி அரசு பஸ் இயக்கத்தில் மாற்றம் பயணிகள் பாதிப்பு
அதிகரட்டி அரசு பஸ் இயக்கத்தில் மாற்றம் பயணிகள் பாதிப்பு
ADDED : மே 07, 2025 01:31 AM
குன்னுார் : குன்னுார்- அதிகரட்டி -- ஊட்டி வரை இயக்கப்பட்ட அரசு பஸ் இயக்க முறை மாற்றப்பட்டதால், பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குன்னுாரில் இருந்து அதிகரட்டி வழியாக ஊட்டிக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ்சில், பாலகொலா, நுந்தளா, சேலாஸ், கோடேரி, மணியாபுரம் உட்பட சுற்றுப்புற கிராம மக்கள் நேரடியாக ஊட்டிக்கு சென்று வந்தனர்.
இந்நிலையில், அதிகரட்டி கிராம மக்கள் போராட்டம் நடத்தியதால், மகளிரின் விடியல் பயணத்திற்காக இந்த வழித்தடத்தில் பஸ் இயக்க முறையை மாற்றி, குன்னுார் - - அதிகரட்டி இடையில் மட்டுமே இயக்கப்படுகிறது.
பஸ் இயக்க முறை மாற்றப்பட்டதால், பல கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் மற்றும் மாநில முதல்வருக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.
அதிகரட்டி பேரூராட்சி உறுப்பினர் மனோகரன் கூறுகையில், ''குன்னுாரில் இருந்து அதிகரட்டி வழியாக, ஊட்டி வரை இயக்கப்பட்ட அரசு பஸ்சில் மருத்துவமனைக்கும், துக்க நிகழ்வுகளுக்கும் மக்கள் எளிதாக சென்று வந்தனர்.
இயக்க முறை மாற்றப்பட்டதால், மற்ற கிராம மக்கள் இரு பஸ்களில், மாறி ஏறி செல்வதுடன், 20 கி.மீ., வரை கூடுதல் துாரம் பயணிக்கின்றனர். கட்டணமும் இரு மடங்கு செலவாகிறது.
பள்ளி மாணவ, மாணவியர், விவசாயிகள், கூலி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், எனவே இந்த வழித்தட இயக்க முறையை பழையது போல தொடர வேண்டும்,'' என்றார்.