/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கால்வாய் கழிவுகளை கையில் அள்ளும் அவலம்; நோய் அபாயத்தில் துாய்மை பணியாளர்கள் குன்னுாரில் நோய் அபாயத்தில் துாய்மை பணியாளர்கள்

ADDED : பிப் 17, 2025 10:20 PM
குன்னுார்; குன்னுாரில் எந்தவித பாதுகாப்பு கையுறைகள் பயன்படுத்தாமல் கழிவுகளை கைகளில் எடுக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
குன்னுார் நகராட்சியில் உள்ள, 30 வார்டுகளில் நுாற்றுக்கணக்கான துாய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு, பாதிப்புகள் ஏதும் ஏற்படாமல் இருக்க கையுறை, காலணி, சலவை சோப்புகள், ரிப்ளக்ஸன் சர்ட், குப்பை அள்ளும் கரண்டி, துடைப்பம் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும்.
ஆனால், குன்னுார் நகராட்சியில் உள்ள துாய்மை பணியாளர்களுக்கு, பாதுகாப்பு உபகரணங்கள் உரிய முறையில் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில், குன்னுார் கன்னிமாரியம்மன் கோவில் தெரு பகுதியில், கழிவு நீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டிருந்ததை துாய்மை பணியாளர் ஒருவர், கையுறை இல்லாமல் கைகளிலேயே எடுத்து கழிவுகளை வெளியே கொட்டியுள்ளார். இதனை கண்ட பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மக்கள் கூறுகையில், 'சாக்கடையில் உடைந்து போன கண்ணாடி துகள்கள் விஷ பூச்சிகள் உள்ளன. அதில், கையை விடுவதால், பணியாளர்களுக்கு பல்வேறு நோய்கள் உட்பட பிற பாதிப்புகள் ஏற்படும். நகரின் தூய்மைக்காக போராடும் இந்த பணியாளர்களுக்கு நகராட்சி உரிய முறையில் பாதுகாப்பு உபகரணங்களை அதிகளவில் வழங்க வேண்டும்,' என்றனர்.
கமிஷனர் இளம்பரிதி கூறுகையில், ''கழிவுகளை கைகளிலேயே எடுக்க கூடாது என கூறியும் அவர்கள் சில நேரங்களில் இவ்வாறு பணிபுரிகின்றனர். துாய்மை பணியாளர்களுக்கு தினமும் சாதாரண கையுறைகள் வழங்கப்படுகிறது. கழிவுநீர் கால்வாய்களில் மேற்கொள்ளும் ரப்பர் கையுறை பணிகளின் போது மட்டும், கொடுத்து மீண்டும் பெறப்பட்டு நகராட்சியில் வைக்கப்படுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.