/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'ஜெய் ஸ்ரீராம்' கோஷமிட்டு அமைச்சருடன் தி.மு.க., வினரை விரட்டிய மக்கள்
/
'ஜெய் ஸ்ரீராம்' கோஷமிட்டு அமைச்சருடன் தி.மு.க., வினரை விரட்டிய மக்கள்
'ஜெய் ஸ்ரீராம்' கோஷமிட்டு அமைச்சருடன் தி.மு.க., வினரை விரட்டிய மக்கள்
'ஜெய் ஸ்ரீராம்' கோஷமிட்டு அமைச்சருடன் தி.மு.க., வினரை விரட்டிய மக்கள்
UPDATED : ஏப் 11, 2024 02:57 PM
ADDED : ஏப் 11, 2024 02:49 PM

குன்னுார் : தி.மு.க., வேட்பாளர் ராஜாவிற்கு ஓட்டு சேகரிக்க, சென்றபோது நீலகிரி தொகுதியில் கிராமத்திற்குள் வரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டு, அமைச்சர் மற்றும் கட்சியினரை மக்கள் வெளியேற சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம், குன்னுார் கேத்தி அருகே துாரட்டி கிராமத்திற்கு தி.மு.க.,வினர் பிரசார வாகனத்துடன் சென்று பிரசாரத்தை துவக்கினர். அப்போது, பிரசாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, 'ஜெய் ஜெய் ஸ்ரீ ராம்; பாரத் மாதா கி ஜே' என, மக்கள் கோஷம் எழுப்பினர்.
எனினும், பிரசார வாகனத்திலிருந்து ஒலிபெருக்கி மூலம், கட்சி பாடலை ஒலிபரப்பி சில தொண்டர்கள் நடனம் ஆடினர். இதனால் மேலும் கொந்தளித்த கிராம மக்களும் 'ஜெய் ஸ்ரீ ராம்' என, தொடர்ந்து கோஷம் எழுப்பினர். பிரசாரத்தை மேற்கொள்ள முடியாமல் தி.மு.க.,வினர் கிளம்பி சென்றனர்.
இந்து கடவுள்களை கேவலப்படுத்துவதா ?
கிராமத்தை சேர்ந்த வினோத் கூறுகையில்,''நமது இந்து கடவுள்களை கொச்சைப்படுத்தியும், மகளிரை கேவலப்படுத்தியும் பேசும், நீலகிரி தி.மு.க., வேட்பாளர் ராஜாவிற்கு ஓட்டு கேட்டு யாரும் கிராமத்திற்கு வரக்கூடாது,' என, ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் உட்பட தி.மு.க., வினர் வந்து பேச்சை துவக்கியவுடன் நரேந்திர மோடி குறித்தும் தவறாக பேசினர். இந்து கடவுள்களை கேவலப்படுத்தும் தி.மு.க., வினரை விரட்டும் வகையில் மக்கள் அனைவரும் 'ஜெய் ஸ்ரீ ராம்' என, கோஷம் எழுப்பினர். கடவுள்களையும், இந்து மக்களையும் கேவலப்படுத்துபவருக்கு ஓட்டு கேட்டு யாரும் வரக்கூடாது,'' என்றார்.

