/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையில் சிதறி கிடக்கும் கோழி கழிவுகளால் சிக்கல்; ஊராட்சி மெத்தனத்தால் நோய் பரவும் அபாயம்

ADDED : ஏப் 21, 2025 05:00 AM
ஊட்டி : பாலகொலா சாலையில் கொட்டப்படும் கோழி கழிவுகளை ருசி பார்க்க வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
ஊட்டி அருகே பாலகொலா ஊராட்சிக்கு உட்பட்ட ஆறாவது மையில் பகுதியில் வணிக நிறுவனங்கள், வங்கிகள், பள்ளி மற்றும் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள்,மின்வாரிய அலுவலகம் உள்ளன. அதிகரட்டி, கொடலட்டி, பாலகொலா, முதுகுலா, நுந்தளா, மீக்கேரி, மணிஹட்டி, தாம்பட்டி சுற்று வட்டார பகுதி மக்கள் அத்தியாவசிய தேவைக்கு இங்கு வருகின்றனர்.
இங்கு, பாலகொலா கிராமத்துக்கு செல்லும் சாலையில் கோழி கடைகள் செயல்படுகிறது. கோழி கடைகளிலிருந்து வெளியேறும் கழிவுகளை இரவு நேரங்களில் சில நபர்கள் பிரதான சாலையோரங்கள், முட்புதரில் வீசி எறிகின்றனர்.
இவ்வாறு வீசி எறியும் கழிவுகளை ருசிப்பதற்காக வரும் நாய், சிறுத்தை, கரடி உள்ளிட்ட விலங்குகள், கழிவு மூட்டைகளை சாலைக்கு இழுத்து வருவதால் சாலையில் ஆங்காங்கே கழிவுகள் சிதறி கிடக்கிறது. கடும் துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவதால் மக்களும் பீதி அடைந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் பாலகொலா ஊராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
மக்கள் கூறுகையில், 'பாலகொலா ஊராட்சி நிர்வாகம் இனியும் தாமதிக்காமல் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.