/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோழிப்பண்ணையில் தீ கோழிகள் இறப்பு
/
கோழிப்பண்ணையில் தீ கோழிகள் இறப்பு
ADDED : மே 21, 2025 11:06 PM
பாலக்காடு;பாலக்காடு அருகே, கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில், ஆயிரக்கணக்கான கோழிகள் இறந்தன.
கேரள மாநிலம், கோழிக்காடு மாவட்டம், கல்லாயி பகுதியை சேர்ந்தவர் ஷெமீர். பாலக்காடு மாவட்டம், அலநல்லூர் அருகே கோழிப்பண்ணை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், நேற்று அதிகாலை ஷெமீர், கோழிகள் பராமரிப்பு பணிகளை முடிந்து, பண்ணையின் அருகே தங்கும் இடத்திற்கு சென்றுள்ளார்.
இதே நேரத்தில், கோழிப்பண்ணை திடீரென் தீ பிடித்து எரிய துவங்கியது. கோழிகள் கத்தும் சப்தம் கேட்டு ஷெமீர் ஓடி வந்து பார்த்தபோது, பண்ணையிலுள்ள, 2,720 கோழிகள் தீயில் கருகி இறந்திருந்தன. அப்பகுதி மக்கள் மற்றும் ஷெமீர் இணைந்து தீயை அணைத்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.