ADDED : ஜன 03, 2024 11:32 PM
பெ.நா.பாளையம், : பெரியநாயக்கன்பாளையத்தில் நாளை மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடக்கிறது.
பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பாலகிருஷ்ணா திருமண மண்டபத்தில் நாளை மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் காலை, 10.00 மணி முதல் மாலை, 3.00 மணி வரை நடக்கிறது.
முகாமில், புதிய மின் இணைப்பு, மின் கட்டண மாற்றங்கள், மின் இணைப்பு பெயர் மாற்றம், கட்டுமான வரைபட ஒப்புதல், சொத்து வரி, குடிநீர் வரி பெயர் மாற்றங்கள், வர்த்தக குடிநீர், கழிவுநீர் இணைப்பு, பிறப்பு, இறப்பு சான்றிதழ், திடக்கழிவு மேலாண்மை, காலி மனை வரிவிதிப்பு, சாலையோர வியாபாரிகள் அடையாள அட்டை, பட்டா மாறுதல், பட்டா உட்பிரிவு, இணைய வழிபட்டா, நில அளவீடு, வாரிசு, சாதி, வருமானம், இருப்பிடம் உள்ளிட்ட இதர சான்றிதழ்கள், முதியோர், விதவை, கணவரால் கை விடப்பட்டவர், மாற்றுத்திறனாளி, முதிர் கன்னி, மூன்றாம் பாலினத்தவர்களுக்கான உதவித்தொகைகள் கோரி, விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படுகின்றன. இது தவிர, காவல்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வாழ்வாதார கடன் உதவிகள், ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை வாயிலாக வழங்கப்படும் உதவிகள், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில், பொதுமக்களின் விண்ணப்பங்கள் பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கின்றன.
இம்முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி அறிவித்துள்ளது.