/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
முதல்வர் கோப்பை கிரிக்கெட் போட்டி; 'ஜெய்பீம்' விளையாட்டு சங்கம் சாம்பியன்

ADDED : செப் 02, 2025 08:17 PM

கோத்தகிரி; கோத்தகிரி காந்தி மைதானத்தில் நடந்த முதல்வர் கோப்பை கிரிக்கெட் போட்டியில், 'ஜெய்பீம் விளையாட்டு சங்கம் சாம்பியன் பட்டம் வென்றது.
கோத்தகிரி காந்தி மைதானத்தில் முதல்வர் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி நடந்தது. மூன்று நாட்கள் நடந்த போட்டி தொடரில், 35 வயதுக்கு உட்பட்டோருக்கான, ஆண்கள் பிரிவில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 32 அணிகள் பங்கேற்று விளையாடின.
இறுதி போட்டி, ஜெய்பீம், சிவகாமி விளையாட்டு சங்க அணிக்கும் இடையே நடந்தது. முதலில் பேட்டிங் செய்த ஜெய்பீம் அணியினர், 30 பந்துகளில், மூன்று விக்கெட்களை இழந்து, 58 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய சிவகாமி சங்க அணியினர், ஐந்து ஓவர்களில், கடைசி வரை போராடி, 56 ரன்கள் மட்டும் எடுத்தனர்.
இதன் மூலம், 3 ரன்கள் வித்தியாசத்தில், ஜெய்பீம் சங்க அணியினர் சாம்பியன் வென்றனர். முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற அணியினருக்கு முறையே, 3000, 2000, 1000 ரூபாய் மற்றும் கோப்பை வழங்கப்பட உள்ளது.