/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ராணுவ பயிற்சி கல்லுாரிக்கு முப்படை தலைமை தளபதி வருகை
/
ராணுவ பயிற்சி கல்லுாரிக்கு முப்படை தலைமை தளபதி வருகை
ராணுவ பயிற்சி கல்லுாரிக்கு முப்படை தலைமை தளபதி வருகை
ராணுவ பயிற்சி கல்லுாரிக்கு முப்படை தலைமை தளபதி வருகை
ADDED : ஜூலை 20, 2025 10:12 PM

குன்னுார்; குன்னுார் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லுாரிக்கு முப்படை தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான் வருகை தந்தார்.
வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லுாரியில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், நம் நாடு மட்டுமின்றி நட்பு நாடுகளின் முப்படை, இளநிலை பயிற்சி அதிகாரிகள் முன்னிலையில், உரையாற்றினார்.
அப்போது, 'ஆப்ரேஷன் சிந்துார் நாட்டின் முப்படைகளின் ஒற்றுமை, முக்கியத்துவம், செயல்பாடுகள், இயக்கவியல், ஒருங்கிணைப்பு, கூட்டு திறன், திறன் மேம்பாடு, நம் நாட்டு ராணுவத்தில் பின்பற்றப்படும் மாற்றங்களை புரிந்து கொள்வது,' குறித்து விளக்கினார்.
தொடர்ந்து, கல்லுாரி கமாண்டன்ட் லெப். ஜெனரல் விரேந்திர வாட்ஸ் உட்பட அதிகாரிகள் கலந்துரையாடல் நடத்தி 'குரூப்' போட்டோ எடுத்து கொண்டனர்.