/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குழந்தை ஏசு தேவாலயம் 40வது ஆண்டு விழா
/
குழந்தை ஏசு தேவாலயம் 40வது ஆண்டு விழா
ADDED : ஜன 08, 2024 11:56 PM
ஊட்டி;ஊட்டி குழந்தை ஏசு தேவாலயத்தின் 40ம் ஆண்டு விழா நடந்தது.
நேற்று முன்தினம் காலை, 10:30 மணிக்கு மறைமாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில் பங்கு குரு செல்வநாதன் மறைமாவட்ட காசாளர் ஸ்டீபன் லாசர் உதவி பங்கு குரு பிரெட்ரிக் இணைந்து திருப்பலி நடத்தினர்.
நடப்பாண்டில் போப் ஆண்டவர் பிரான்சிஸ், சுற்றுசூழலை பாதுகாக்க கத்தோலிக்க திருச்சபை மிக பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது .
பிஷப் அமல்ராஜ் கூறுகையில், '' சுற்றுப்புற சூழலை பாதுகாப்பது நம் கடமை. பெற்றோர் பிள்ளைகளுக்கு சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு குறித்து அறிவுரை வழங்க வேண்டும்,'' என்றார்.
அனைவருக்கும் அன்பின் விருந்து வழங்கப்பட்டது. மதியம், 3:00 மணிக்கு மலையாளத்தில் புனித சூசையப்பர் ஆலய பங்கு குரு சிஜோ ஜார்ஜ் தலைமையில் நடந்தது. ஏற்பாடுகளை பங்கு குரு செல்வநாதன் உட்பட பலர் செய்திருந்தனர் .