UPDATED : மே 17, 2026 03:43 PM
ADDED : மே 17, 2026 03:10 PM
கூடலூர்:கூடலூர் ஜீன்பூல் தாவரம் மையத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள நீர்வீழ்ச்சிகள் சிறுவர்களை கவர்ந்துள்ளது.
கூடலூர், நாடுகாணி தாவர மையத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், காட்சி முனை, நண்ணீர் மீனகம், பெரணி கண்ணாடி இல்லம், நீர் தாவரங்கள், ஆர்க்கிடோரியம் கண்ணாடி மாளிகை, ஆர்கிட் பசுமைக்குடில், மியூசியம் அமைக்கப்பட்டு இருப்பதுடன், ஜிப்லைன் சாகச சுற்றுலா செயல்பட்டு வருகிறது.சுற்றுலா பயணிகள் முன்பதிவுடன் மலையேற்றம் அழைத்துச் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், ஆர்க்கிடோரியம் மற்றும் ஆர்கிட் பசுமை குடில் அருகே சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் செயற்கை நீர்வீழ்ச்சி அமைத்துள்ளனர்.
இங்கு வரும் சிறுவர்கள், சிறுமிகள் செயற்கை நீர்வீழ்ச்சி அழகை ரசித்து, அருகே நின்று செல்பி எடுத்து செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர்.
